Theme Check

கொரோனா, டெங்குவை அடுத்து உ.பி.யை மிரட்டும் ஜிகா வைரஸ்.. பாதித்தவர்கள் எண்ணிக்கை எகிறியது !

கொரோனா, டெங்குவை அடுத்து உ.பி.யை மிரட்டும் ஜிகா வைரஸ்.. பாதித்தவர்கள் எண்ணிக்கை எகிறியது !

கொரோனா, டெங்குவை அடுத்து உ.பி.யை மிரட்டும் ஜிகா வைரஸ்.. பாதித்தவர்கள் எண்ணிக்கை எகிறியது !
X

உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டு தற்போது சிறிது ஓய்வு எடுக்கிறது. அதாவது இந்தியா முழுவதும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு அடுத்ததாக மிரட்டுகிறது.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு முதல்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்து அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

corona
அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் டெங்கு பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கான்பூர் பகுதியில் புதிதாக 30க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 45 ஆண்களும், 21 பெண்களும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it