Theme Check

கொரோனா : காஞ்சிபுரத்தில் 22 பேர் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் வசித்து வந்த பகுதியிலும், அவர் சந்தித்த நபர்கள் என 22 பேரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கொரோனா : காஞ்சிபுரத்தில் 22 பேர் தீவிர கண்காணிப்பு
X

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 22 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் வசித்து வந்த பகுதியிலும், அவர் சந்தித்த நபர்கள் என 22 பேரின் விவரங்களை சேகரித்த சுகாதாரத்துறையினர், அவர்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கொரோனா : காஞ்சிபுரத்தில் 22 பேர் தீவிர கண்காணிப்பு
வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் துறை துணை இயக்குனர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it