தனுஷ் புதுப்பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு !!
தனுஷ் புதுப்பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு !!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, 2017 முதல் படங்களில் நடித்து வருகிறார். விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, அடுத்ததாக மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவரே ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தற்போது நீங்கள் ஒரு கொரோனா நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி என அனைத்தையும் கடைப்பிடித்து வந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் ஒரு சிறு சோர்வு என்னுடைய இயல்பு வாழ்க்கையை பாதித்துவிட்டது.
தற்போது நுரையீரல் திறனை அதிகரிக்க யோகா செய்து கொண்டிருக்கிறேன். என் பெற்றோருடன் பால்கனி வழியே பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே, முகக்கவசம் அணியுங்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள், இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
newstm.in

