Theme Check

முதலமைச்சர் மீது ஊழல் புகார்.. தேசத்துரோக வழக்கில் ஆந்திரா எம்.பி. கைது !!

முதலமைச்சர் மீது ஊழல் புகார்.. தேசத்துரோக வழக்கில் ஆந்திரா எம்.பி. கைது !!

முதலமைச்சர் மீது ஊழல் புகார்.. தேசத்துரோக வழக்கில் ஆந்திரா எம்.பி. கைது !!
X

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருந்து வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க மனுதாரர் தரப்பில் கடுமையாக போராடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு இந்த வழக்கில் அளித்த ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் எம்.பி. கிருஷ்ணம் ராஜு கோரிக்க வைத்தார். கிருஷ்ணம் ராஜு எம்.பி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமை ஆட்சி மீது தொடர்ந்து ஊழல் புகார்களை அடுக்கி வந்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணம் ராஜு அரசுக்கு எதிராக சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மேலும் கிருஷ்ணம் ராஜு மீது அரசுக்கு எதிரான துரோகம் பிரிவு 124ஏ, சமூகத்தில் சில பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் பிரிவு 153 ஏ, மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், எம்.பி. ராஜு இருபிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக வெறுப்புப் பேச்சை பேசி வருவதாகவும் அரசுக்கு எதிராக கலத்தை தூண்டி விடுவதாகவும் புகார்கள் எழுந்தன. தனது வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுக்கள் மூலம் எப்போதும் பதற்றத்தை உருவாக்குகிறார். அரசு முக்கியஸ்தர்களை நோக்கி அவர் வைக்கும் தாக்குதல்கள் அரசின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணம் ராஜு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார். ஆனால் மீண்டும் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னால் கட்சியில் இணைந்தார், இடையில் பாஜக மற்றும் தெலுங்கு தேசத்தில் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it