“ஒரு வாரத்தில் அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியல்” – அண்ணாமலை அதிரடி!!
“ஒரு வாரத்தில் அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியல்” – அண்ணாமலை அதிரடி!!

தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் பற்றிய ஊழல் ஆதாரத்தை வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி காட்டியுள்ளார்.
பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மேடையில் பேசியது திமுக அரசியல் மேடைப்பேச்சாக இருந்தது என்று விமர்சித்துள்ளார். சமூக நீதி பற்றி முதலமைச்சர் பேசுகிறார் அதே மேடையில் ராஜகண்ணப்பனை பற்றி பேசி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட்டார்கள், எப்படிப் பேசினார்கள் என்பதை அதே மேடையில் முதலமைச்சர் சொல்லியிருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

2021இல் அண்டை மாநிலமான கர்நாடகம் தமிழகத்தை விட 6 மடங்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு அப்படி எந்த ஒரு பெரிய முதலீடும் வரவில்லை இது தான் திராவிட மாடலா கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அமைச்சர்கள் ஊழல் குறித்து ஒரு வாரத்தில் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிரடி காட்டியுள்ளார். அதனால் இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும் எனவும் கூறினார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

