Theme Check

மாணவர்களுக்குக் கவுன்சிலிங்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

மாணவர்களுக்குக் கவுன்சிலிங்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

மாணவர்களுக்குக் கவுன்சிலிங்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
X

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: “பள்ளி மாணவர்கள் வேண்டுமென்றே படிக்கட்டுகளில் பயணிக்கும் நிலை அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் செங்கல்பட்டில் அதிகமாக நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு தனியார் அமைப்பின் மூலம் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவதற்கு அனுமதி அளித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Next Story
Share it