கள்ளச்சாராய வழக்கு.. பெண்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது !
கள்ளச்சாராய வழக்கு.. பெண்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது !

கள்ளச்சாராய விற்பனை வழக்கில் 3 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் அதிகம் காய்ச்சப்படுவதாக புகார் உள்ளது. அங்கு போலிசார் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சாராய கும்பல் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராணி (56), ஜோதி (27) தும்பேரி பகுதியைச் சேர்ந்த தாயம்மாள் (38) ஆகிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் மீது வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மற்றும் அம்பலூர் காவல் நிலையத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், 3 பெண்களையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா உத்தரவிட்டுள்ளார்.
newstm.in

