வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த தம்பதி அதிரடி கைது!!
வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த தம்பதி அதிரடி கைது!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், பொன்னமரவாதி, மாத்தூர், மண்டையூர் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாத்தூர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நகார்கோவில் பகுதியைச் சேர்ந்த லதா, மதுரையைச் சேர்ந்த ராமு என்பது தெரிந்தது.

லதா ராமுவை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதி புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து யாரும் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
newstm.in

