Theme Check

இரண்டு மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோருக்கு நீதிமன்றம் ஜாமீன்..!

இரண்டு மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோருக்கு நீதிமன்றம் ஜாமீன்..!

இரண்டு மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோருக்கு நீதிமன்றம் ஜாமீன்..!
X

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ள புருஷோத்தம் மற்றும் தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியையாக இருக்கும் பத்மஜா ஆகிய கணவன் மனைவி இருவரும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி 24-ம் தேதி இரவு தம்பதியினர் வீட்டில் இருந்து ஏதோ சத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திக்கு போலீஸார் வந்து பார்த்த போது புருஷோத்தம் வீட்டின் பூஜை அறையில் இரண்டு இளம் பெண்கள் நிர்வணமாக ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அப்போது புருஷோத்தம் மற்றும் பத்மஜாவை பிடித்து விசாரித்த போது, இறந்து கிடப்பது தங்களுடைய மகள்கள் தான். விசேஷ பூஜைகள் செய்து உடற்பயிற்சி செய்யும் டம்பிள்ஸால் அடித்து அவர்களை நரபலி கொடுத்துவிட்டதாகவும், ஒருநாள் காத்திருந்தால் இறந்துபோன இருவரும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிரிந்த போன போலீஸார் அவர்களை கைது செய்த காவல்துறையினர், இளம்பெண்கள் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புருஷோத்தம் மற்றும் பத்மஜாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து இருவருக்கும் தகுந்த முறையில் மனநல சிகிச்சை வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து இருவரும் மார்ச் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தம்பதிகள் இருவருக்கும் பிணை கோரி அவர்களுடைய உறவினர்கள் நீதிமன்றத்தை நாடினர். தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் பத்மஜா மற்றும் புருஷோத்தம் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it