கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து கோவேக்சின்.. தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் !!
கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து கோவேக்சின்.. தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் !!

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த மருந்துகளுக்கான விலையை நிர்ணயம் செய்ய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சமீபத்தில் கோவிஷீல்டு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்த வகையில் தற்போது, கோவேக்சின் தடுப்பூசிக்கான விலையை அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிர்ணயம் செய்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு ஒரு டோஸ் ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விலை 15 முதல் 20 டாலர் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் 1123 முதல் 1498 வரை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு கோவேக்சின் மருந்து ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அந்த மருந்தை மத்திய அரசு மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

newstm.in

