Theme Check

குஜராத்தில் கொரோனாவை விரட்ட மாட்டு சாண தெரபி.. மருத்துவர்கள் எச்சரிக்கை !!

குஜராத்தில் கொரோனாவை விரட்ட மாட்டு சாண தெரபி.. மருத்துவர்கள் எச்சரிக்கை !!

குஜராத்தில் கொரோனாவை விரட்ட மாட்டு சாண தெரபி.. மருத்துவர்கள் எச்சரிக்கை !!
X

இந்தியாவின் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஒருசில வடமாநிலங்களில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்புகள் முறையாக இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக புகார் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனாவை விரட்டுவதாக கூறி ஒருசிலர் செய்கையால் பெரும் அதிருப்தி நிலவுகிறது.

குஜராத்தின் அகமதாபாத்தில் ஸ்ரீஸ்வாமிநாராயண் குருகுல் விஷ்வவித்யா பிரதிஷ்தனம் என்ற பெயரில் கோசாலை இயங்கி வருகின்றது. இங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிறும் சுமார் 15 பேர் இங்கு வந்து மாட்டுச்சாண தெரபி சிகிக்சை எடுத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் மாட்டு சாணம், கோமியம் தேய்ப்பது அதன் பின்னர் பால் மூலமாக அவை கழுவப்படுகின்றது. சில மருத்துவர்கள் கூட இதில் பங்கேற்பது தான் சோகம்.

இந்நிலையில் மாட்டு சாண தெரபி கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு வழங்காது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் கூறுகையில், மாட்டு சாணம் என்பது கழிவு. மாட்டுசாணம், கோமியத்தை உடலில் பூசுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது மற்றும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்காது, ஆனால் மியூகோர்மைகோசிஸ் போன்ற இதர பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளார்.

மேலும், மாட்டு சாணத்தை உடலில் பூசுவதால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தொடர்பாக எந்த ஆராய்ச்சியோ, பரிந்துரையோ என பொது சுகாதார இயக்குனர் கூறியுள்ளார்.

Newstm.in

Tags:
Next Story
Share it