Theme Check

வழிப்பறியில் ஈடுபட்ட பசு பாதுகாவலர்கள் கைது!!

வழிப்பறியில் ஈடுபட்ட பசு பாதுகாவலர்கள் கைது!!

வழிப்பறியில் ஈடுபட்ட பசு பாதுகாவலர்கள் கைது!!
X

பசு பாதுகாவலர்கள் என்று கூறி மாடுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்ய முயன்றி இரண்டு பேரை போலீலார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த லாரி ஆந்திராவில் இருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திருச்சியின் துறையூர் பகுதியில் காரில் வந்த இருவர் லாரியை மடக்கியினர்.

அப்போது, தங்களை இந்து அமைப்பைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொண்டு லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இந்து அமைப்பினரின் மிரட்டலுக்கு லாரி பணியாளர்கள் அஞ்சவில்லை.

pasu

இதனையடுத்து பணம் கொடுக்க மறுத்த லாரி பணியாளர்களை அவர்கள் பிரம்பால் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக துறையூர் காவல்நிலையத்துக்கு லாரி லோடுமேன் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவம் நடந்த கிழக்குவாடிக்கு வந்த போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர். அதில் அவர்கள் திருச்சி வத்தாலை பகுதியைச் சேர்ந்த சிரஞ்ஜீவி (29), கண்ணன் (33) என தெரியவந்தது.

இருவரும் இந்து அமைப்பின் பேரில் இவ்வாறு தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it