Theme Check

அரசு பேருந்தில் கிரிக்கெட் ஜாம்பவான்.. வைரலாகும் புகைப்படம்..!

அரசு பேருந்தில் கிரிக்கெட் ஜாம்பவான்.. வைரலாகும் புகைப்படம்..!

அரசு பேருந்தில் கிரிக்கெட் ஜாம்பவான்.. வைரலாகும் புகைப்படம்..!
X

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பேருந்தில் பயணம் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் மூலம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் ஆவார்.

மும்பையை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவரது சாதனைகள் சிலவற்றை தற்போதைய பேட்ஸ்மேன்களால் கூட முறியடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தான் பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Image
அந்த படத்தில், நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்டுடன் சச்சின் டெண்டுல்கர் காட்சி அளிக்கிறார். அந்த ட்விட்டர் பதிவில், குழந்தை பருவத்திற்கு திரும்பியதை நினைவு கூர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் சிறு வயதில் அரசுப் பேருந்து மற்றும் புறநகர் ரயில்களில் பயணித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் பேருந்தில் பயணம் செய்த அவர், அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
Share it