Theme Check

இதுபோன்ற குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்

இதுபோன்ற குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்

இதுபோன்ற குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்
X

பஞ்சாப் மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது பொற்கோவிலில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம். சில நாட்களுக்கு முன்பு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் சீக்கியர்களின் புனித நூல் மற்றும் வாள் ஆகியவற்றை அவமதிக்க முயன்றதாக, அங்குள்ளவர்கள் அவரை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

அதேபோல், நிஜாம்பூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த ஒருவர், அங்கிருந்த சீக்கியர்களின் கொடியான நிஷான் சாகிப்பை அகற்ற முயன்றுள்ளார். இவரையும் பிடித்து அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்தில் அந்நபர் உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களில் இருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

punjab murder

சீக்கியர்களின் புனித நூல், புனித இடங்களுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள் வாய் திறக்கவில்லை. இதற்கு ஒரு காரணமும் உள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதனால் என்ன கருத்தை கூறுவது என அரசியல் தலைவர்கள் தயங்கி வாய் திறக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கான பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சித்து, அவமதிப்பு செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மலேர்கோட்லா என்ற இடத்தில் சித்து நேற்று பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இழிவு செயலில் ஈடுபடும் நபர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற செயல் ஒரு சமூதாயத்திற்கு எதிரான சதி. பஞ்சாபில் அமைதியை சீர்குழைலக்க அடிப்படைவாத சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.

newstm.in

Tags:
Next Story
Share it