விநாயகர் சிலை கரைக்கவேண்டிய குளத்தில் முதலை.. பக்தர்கள் அதிர்ச்சி.. அச்சம் !!
விநாயகர் சிலை கரைக்கவேண்டிய குளத்தில் முதலை.. பக்தர்கள் அதிர்ச்சி.. அச்சம் !!

நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைவைத்து வழிபட தடைவிதிக்கப்பட்டது. எனினும் புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பொதுஇடங்களில் சிலை வைத்தும், கட்டுப்பாடுகளுடன் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் பல இடங்களில் சிலைகளை வைத்து வழிபட்டனர். வதோதரா நகரில் விநாயகர் சதுர்த்தியை முனின்ட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க குளம் ஒன்ற அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பொதுமக்கள் சிலைகளை கரைத்து வந்தனர்.
இந்த நிலையில், குளத்தில் இருந்து திடீரென 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்து உள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வனவாழ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பின்னர் அந்த முதலை மீட்பு குழுவால் மீட்கப்பட்டு வனதுறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குளத்திற்கு அருகே உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து தப்பி இந்த முதலை குளத்திற்கு வந்திருக்க கூடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் அந்த ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க மக்கள் அச்சமடைந்து செல்ல மறுத்தனர். அதேநேரத்தில் இந்த முதலையால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
newstm.in

