திரளும் மக்கள்.. சென்னை கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு !!
திரளும் மக்கள்.. சென்னை கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு !!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி கடந்த 3ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலைவாணர் அரங்கில் ஜூன் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி(இன்று) வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது

இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். இனி வரும் அனைத்து ஆண்டுகளிலும் மலர் கண்காட்சி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த மலர் கண்காட்சியில் மாணவர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
newstm.in

