குறைந்த விலையில் கச்சா எண்ணெய்!!
குறைந்த விலையில் கச்சா எண்ணெய்!!

ஒரு பீப்பாய் 35 டாலர் வரை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.
உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா இந்தியாவிற்கு பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர் தள்ளுபடி என்ற அளவிற்கு கச்சா எண்ணெய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போருக்கு முந்தைய விலையை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் கணிசமான தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில்,இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்க ரஷ்யா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
ஆசியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சர்வதேச அழுத்தம் மற்றும் தடைகளை மீறி, ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை இரட்டிப்பாக்கி வரும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.

முன்னதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷியாவிடமிருந்து 20-25 சதவீத தள்ளுபடி விலையில் வாங்குவதாக செய்தி வெளியானது.
கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது இந்தியாவை பெரிய ஆபத்தில் தள்ளக்கூடும் என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
newstm.in

