Theme Check

கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

சவூதி அரேபியா கச்சா எண்ணெய் விற்பனை விலையை இன்று மிகவும் குறைத்து அறிவித்துள்ளது. இதனால், கடந்த 1991ஆம் ஆண்டுக்கு பின்னர் எப்போதும் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!
X

சவூதி அரேபியா கச்சா எண்ணெய் விற்பனை விலையை இன்று மிகவும் குறைத்து அறிவித்துள்ளது. இதனால், கடந்த 1991ஆம் ஆண்டுக்கு பின்னர் எப்போதும் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது.


ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்து வரும் நிலையில், சந்தையில் அந்த நெருக்கடியை சமாளிக்க உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தை கைப்பற்ற சவுதி திட்டமிட்டுள்ளது.

பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலையானது 14.25 டாலர் அல்லது 31.5 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 31.02 டாலராக உள்ளது. இது கடந்த ஜன.17, 1991 ஆம் ஆண்டு முதல் வளைகுடாப் போர் தொடங்கிய சமயத்துக்கு பின்னர் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான விலை வீழ்ச்சியாகும். மிகக் குறைந்த பட்சமாக கடந்த பிப்.12 2016ம் ஆண்டில் 35.75 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 11.28 டாலராக, அல்லது 27.4% குறைந்து, தற்போது பீப்பாய் 30 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான ரஷ்ய நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான (OPEC) உற்பத்தி அதிகரிப்பு குறித்து முன்மொழிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சீர்படுத்தும் வகையில், OPEC மற்றும் பிற தயாரிப்பாளர்கள் இந்த விலை குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

OPEC மற்றும் ரஷ்யா இடையேயான தற்போதைய விநியோக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத இறுதியில் முடிவடைகிறது. இதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாயகளுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது என இரு தரப்பு வட்டாரங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உறுதி அளித்துள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ஷேல் நிறுவனம், வயல்களுக்கு அடியில் இருந்து எண்ணெய் எடுப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it