மனைவி விவாகரத்து கேட்டதால் மகனை கொன்ற கொடூர தந்தை!!
மனைவி விவாகரத்து கேட்டதால் மகனை கொன்ற கொடூர தந்தை!!

மனைவி விவாகரத்து கேட்டதால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் தந்தை 7 வயது மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் வரீஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் பைடோனிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவர்களுக்கு 7 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில் பைடோனி மீது அவரது மனைவி குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் விவாகரத்து பெறுவதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். டேவிட் பைடோனின் மனைவியும், மகனும் தனியாக வசித்து வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய 7 வயது மகனுடன் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட வேண்டும், என மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என டேவிட் பைடோனி வைத்த கோரிக்கையை ஏற்று, நீதிபதி அதற்கு அனுமதி அளித்திருக்கிறார்.
தனது தந்தையிடம் செல்ல மாட்டேன் என அச்சிறுவன் தனது தாயிடமும், தாத்தா, பாட்டியிடமும் கெஞ்சியிருக்கிறார். இருப்பினும் நீதிமன்றம் ஆணையிட்டதால் வேறு வழியின்றி அவனை சமாதானப்படுத்தி அவர்கள் தந்தை வீட்டுக்கு அனுப்பினர்.
இந்நிலையில், வீட்டுக்கு வந்த தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த டேவிட் பைடோனி. சிறுவனின் உடலை அலமாரியில் மறைத்து வைத்துவிட்டு. தனது மனைவியின் வீட்டுக்கு சென்று, மகனை திரும்ப அழைத்து வந்துள்ளேன் என கூறி வெளியே வரவழைத்து கத்தியால் அவரை சரமாரியாக குத்தியிருக்கிறார்.

இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் பயந்து போன டேவிட் அங்கிருந்து தப்பினார். காரில் சென்ற டேவிட்டை போலீஸார் சேஸிங் செய்து பிடித்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

