Theme Check

மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்!!

மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்!!

மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்!!
X

பெற்ற தாயே தனது மகளை, ரகசிய காதலனுக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயராமுக்கு வெளியூரில் வேலை இருப்பதால், தாயும் மகளும் தனியே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த கென்னடி என்ற சினிமா இயக்குநர், ஒரு படப்பிடிப்புக்காக தேனிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டது. இந்நிலையில் கென்னடிக்கும் – முத்துச்செல்விக்கும் காதல் மலர்ந்தது.

Affair

இதனையடுத்து அந்த இயக்குநரின் பார்வை சிறுமி பக்கம் திரும்பியது. தனது காம ஆசையை, சிறுமியின் தாயிடம் சொல்ல, அவரும் சரி என்றார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் மதுரையில் கோயில் திருவிழாவுக்கு சென்ற தாய், பாதுகாப்புக்கு என்று சொல்லி கென்னடியை சிறுமியுடன் இருக்க செய்துள்ளார்.

அன்று சிறுமியிடம், எல்லை மீறிய கென்னடி, ஒரே நாளில் நான்கு முறை வலுக்கட்டாயமாக சிறுமியை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், அந்த சிறுமிக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து இதனை செய்யுமாறு தாய் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.

Rape 3

இதுகுறித்து சிறுமி கோடை விடுமுறைக்கு சென்னைக்கு வந்திருந்த போது சித்தப்பா, சித்தியிடம் கூறி கதறி அழுத்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக சிறுமியை தேனிக்கு அழைத்து வந்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்

புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் தாய் முத்துச்செல்வியை அதிரடியாக கைது செய்து செய்தனர். மேலும் பாதிப்பை ஏற்படுத்திய இயக்குநர் தலைமறைவானதால், அவரை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it