Theme Check

கனடாவில் கொடூர வெயில்.. 500-ஐ நெருங்கிய பலியானோர் எண்ணிக்கை !!

கனடாவில் கொடூர வெயில்.. 500-ஐ நெருங்கிய பலியானோர் எண்ணிக்கை !!

கனடாவில் கொடூர வெயில்.. 500-ஐ நெருங்கிய பலியானோர் எண்ணிக்கை !!
X

உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்றாக கனடா கருதப்படுகிறது. எப்போதும் பனி மழை, பனிக்காற்று, குளிர் என பழகிப்போன அந்நாட்டு மக்களுக்கு இந்தஆண்டு வெயில் புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. அதாவது வழக்கத்துக்கு மாறாக கனடாவில் தற்போது மக்களை கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடூரமான வெப்பத்தால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளே நிறுத்தப்பட்டுள்ளன. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் சமீபத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுவே அந்நாட்டில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது. மேலும் கடும் வெயில் காரணமாக மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

வெயிலுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்தனர். கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கனடா மற்றும் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள அரசு நிர்வாகமும் மக்களும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அதாவது சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மக்கள் நீராடி வருகின்றனர்.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in


Tags:
Next Story
Share it