கொடூரம்.. மருத்துவரை பழிவாங்க 8 வயது மகனை கொலை செய்த கம்பவுண்டர்கள் !!
கொடூரம்.. மருத்துவரை பழிவாங்க 8 வயது மகனை கொலை செய்த கம்பவுண்டர்கள் !!

மருத்துவரை பழி தீர்க்க அவரது மகனை கடத்தி கம்பவுண்டர்கள் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்சாகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர், தனது 8 வயது மகன் காணவில்லை என கடந்த 28ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். உறவினர்கள், நண்பர்கள் என அனைவர் வீடுகளிலும், முக்கிய வீதிகளிலும் தேடினர்.
எங்கும் தேடி சிறுவன் கிடைக்காததால், சிறுவனின் தந்தையான மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா?, ஏதேனும் முன்விரோதங்கள் இருந்ததா? என மருத்துவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்த நேரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கிளினிக்கில் வேலை பார்த்த இரண்டு கம்பவுண்டர்கள் வேலையில் செய்த தவறு பணி நீக்கம் செய்ததாக கூறினார். ஆனால், அது வழக்கமான நடவடிக்கை தான் என கூறினார்.

எனினும் சந்தேகமடைந்த போலீசார், இருவர் குறித்தும் விசாரித்தனர். அதன்பேரில், மருத்துவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட கம்பவுண்டர்களை பிடித்து விசாரணை செய்தப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. சிறுவனை தாங்கள் இருவரும் தான் கடத்தி கொலை செய்து உடலை மறைத்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் உடலை மறைத்து வைத்ததாக கூறிய இடத்தில் தேடி சிறுவனின் உடலை கைப்பற்றினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்து வந்த இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், மருத்துவரை பழிவாங்கும் எண்ணத்தில், அவரின் 8 வயது மகனை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
newstm.in

