இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பள்ளி சிறுமிக்கு நடந்த கொடுமை!!
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பள்ளி சிறுமிக்கு நடந்த கொடுமை!!

புதுச்சேரி மாநிலம் நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளிச் சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாகப் பேசிப் பழகி வந்துள்ளளனர்.
இதையடுத்து கடந்த 18ஆம் தேதி சிறுமியை நந்தகுமார் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். அப்போது உடனிருந்த அவரது நண்பரும் அச்சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அச்சிறுமி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரை அடுத்து வீட்டில் பதுங்கியிருந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

