வரும் 20-ம் தேதி விடுமுறை.. கடலூர் கலெக்டர் அறிவிப்பு..!
வரும் 20-ம் தேதி விடுமுறை.. கடலூர் கலெக்டர் அறிவிப்பு..!

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 15-ம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.
இந்நிலையில், வரும் 19-ம் தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ம் தேதியும் நடக்கிறது.
ஆருத்ரா தரிசன நிகழச்சியை முன்னிட்டு, வரும் 20-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய, வரும் ஜனவரி 8-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story

