கலாச்சார சீரழிவு... கைதாகிறாரா ஜி.பி.முத்து..?

கலாச்சார சீரழிவு... கைதாகிறாரா ஜி.பி.முத்து..?

கலாச்சார சீரழிவு... கைதாகிறாரா ஜி.பி.முத்து..?
X

டிக்டாக், ஹெலோ போன்ற செயலிகள் மூலம் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பலர் பிரபலமடைந்துள்ளனர்; சிலர், வெள்ளித்திரையில் நடிகர், நடிகையாக மாறியுள்ளனர். அந்த வகையில், கருத்தே இல்லாமல் காமெடி என்கிற பெயரில் செத்த பயலே... நாரப் பயலே என கண்டதையும் பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர் ஜி.பி.முத்து.

இந்நிலையில், ஆபாச பேச்சுக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கும் காவல்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு; கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முஹைதீன் இப்ராஹிம். இவர், “கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர்.

இந்தச் சூழலை பயன்படுத்தி ஃபேஸ்புக், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் பெருகி வருகின்றன.

அந்த வகையில், ஆபாச பேச்சுக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என, முதல்வரின் தனிப்பிரிவுக்கும் காவல்துறைக்கும் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார்.

Tags:
Next Story
Share it