குவியும் பாராட்டுக்கள்..!! தேச ஒற்றுமைக்காக 2,500 கி.மீ சைக்கிள் பயணம் செய்யும் 10 வயது சிறுவன்!!
குவியும் பாராட்டுக்கள்..!! தேச ஒற்றுமைக்காக 2,500 கி.மீ சைக்கிள் பயணம் செய்யும் 10 வயது சிறுவன்!!

குழந்தைகள் பொதுவாக கார்ட்டூன்கள் பார்ப்பதிலும், விடியோ கேம் விளையாடுவதிலும் பிஸியாக இருக்கும் இந்த வயதில், டெல்லியைச் சேர்ந்த 10 வயது அரப் பரத்வாஜ் நேதாஜியின் செய்தியை பரப்புவதற்காக 2,500 கி.மீ. சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதற்காக மணிப்பூரில் இருந்து டெல்லி வரையிலான 2,500 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து செல்வது என முடிவு செய்து, அதற்கான பயணம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது.
ஏப்ரல் 26-ந் தேதி மேற்கு வங்கத்தின் அலிபூர்துவார் பகுதிக்கு சென்ற அரப், இன்று உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரை சென்றடைந்து உள்ளார்.
இதுவரை 1,700 கி.மீ. தொலைவை நிறைவு செய்துள்ள அரபுக்கு, தந்தை மற்றும் தாத்தா ஷாஜகான்பூரில் சிறந்த வரவேற்பு அளித்தனர். அரப், சிறுவர்கள் விளையாட்டில் சேர வேண்டும் என வலியுறுத்தியதுடன், வருங்காலத்தில் அதனால் நல்ல தடகள வீரர், வீராங்கனைகளை நாடு பெற முடியும் என கூறியுள்ளார்.
2-ம் வகுப்பு படிக்கும்போதே, சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை கேட்டேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாட்டுக்காக நேதாஜி போராடியது பற்றி அறிந்து ஊக்கம் பெற்றேன் என கூறியுள்ளார்.
மேலும், வருங்காலத்தில் இந்திய ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ள அரப், நாட்டுக்கு சேவையாற்ற விருப்பம் என தெரிவித்து உள்ளார்.

