Theme Check

கொரோனா பாதிப்பு 11 சதவீதமாக குறைந்தாலும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு !

கொரோனா பாதிப்பு 11 சதவீதமாக குறைந்தாலும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு !

கொரோனா பாதிப்பு 11 சதவீதமாக குறைந்தாலும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு !
X

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் , மகாராஷ்டிரா , தமிழ்நாடி , டெல்லி வரிசையாக உள்ளது. டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக, தொற்று வேகமாக பரவியதை அடுத்து, கடந்த மூன்று வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 30 சதவீதத்திற்கு மேல் இருந்தது.

தற்போது முழு ஊரடங்கு காரணமாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நாளையுடன் ஊரடங்கு முடிகிறது. இந்நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மே 24ம் தேதி காலை 5 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது..

டெல்லியில், ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜனை வழங்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, இரண்டு மணி நேரத்தில் வீடு தேடி சென்று ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும்” என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it