Theme Check

மே 3 வரை ஊரடங்கு ! தள்ளாடும் பாண்டிசேரி!

மே 3 வரை ஊரடங்கு ! தள்ளாடும் பாண்டிசேரி!

மே 3 வரை ஊரடங்கு ! தள்ளாடும் பாண்டிசேரி!
X

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தினமும் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அதே போல் புதுச்சேரியிலும் தினசரி இரவு ஊரடங்கும் மற்றும் வார இறுதி முழு ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த காலங்களில் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் மட்டுமே செயல்படும்.

இந்நிலையில் இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியர் பூர்வா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரியில் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு நேரமானது தினமும் மதியம் 2 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Tags:
Next Story
Share it