அங்காடி தெரு நடிகை சிந்துவின் தற்போதைய நிலை !!
அங்காடி தெரு நடிகை சிந்துவின் தற்போதைய நிலை !!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள துணை நடிகை சிந்துவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர் சனம் ஷெட்டி. பெங்களூரு சொந்த ஊர் என்றாலும், தமிழ் மொழியில் சிறப்பாக ஆளுமை திறன் அவருக்கு உண்டு. இதனாலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்த போது, நன்மதிப்பை பெற்றார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து அவர் எலிமினேட் செய்யப்பட்டதற்கு பல்வேறு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பல்வேறு சினிமா படங்களில் நடித்தும் கிடைக்காத பிரபலம், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.
இதையடுத்து சமீபத்தில், மார்கப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துணை நடிகை சிந்து சிகிச்சைக்கு பணமில்லாமல் போராடி வந்தார். அதை குறிப்பிட்டு அவருக்கான சமூகவலைதளங்களில் பணம் கேட்டு நடிகை சனம் ஷெட்டி பதிவிட்டு இருந்தார். சிந்துவுக்கு பண உதவி செய்யக்கூடியவர்கள், பணத்தை செலுத்துவதர்க்காக தனியாக ஆரம்பிக்கப்பட்ட கணக்கு விபரங்களையும் அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் சிந்துவிற்கான புற்றுநோய் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துவிட்டதாகவும், இதற்காக உதவி செய்த அன்பர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் நடிகை சனம் ஷெட்டி தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விரைவில் நடிகை சிந்து குணமடைந்து படங்களில் நடிப்பதை தொடர வேண்டும் எனவும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
Happy to convey that Sindhu sister's Surgery was successful (confirmed by her brother) with the grace of God and efficient doctors.
— Sanam Shetty (@SamSanamShetty1) February 26, 2021
Huge thanks to all donors for contributing so generously🙏
Kudos to @milaapdotorg for making this possible 👏#nammakkalinkural #nandri pic.twitter.com/CveKAT30NV

