Theme Check

பட்டப்பகலில் கல்லூரி மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு

சென்னையில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவனுக்கு ஓட ஓட சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் ரூட் தல மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்டனர்.

பட்டப்பகலில் கல்லூரி மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு
X

சென்னையில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவனுக்கு ஓட ஓட சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.


மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் அரும்பாக்கத்தில் மாநகர பேருந்தில் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்களிடயே ஏற்பட்ட ரூட் தல மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரிகளில் படித்து வரும் 90 ரூட் தல மாணவர்களை கணக்கெடுத்து அவர்களிடம் ஓராண்டு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர்.

பட்டப்பகலில் கல்லூரி மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு
இந்நிலையில், ஆவடியில் தங்கியுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை மாநில கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க தயாராக இருந்த பச்சைய்யப்பன் கல்லூரி மாணவர்கள் 12 பேர் சூளைமேடு பகுதியில் மாநிலக்கல்லூரி மாணவரான நேரு என்பவரை பட்டாக்கத்தி, அரிவளால் ஓட ஓட வெட்டினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவன் நேருவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பச்சையப்பன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் கார்த்திக் என்ற மாணவனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it