Theme Check

குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையத்தை ரிப்பன் வெட்டி திறப்பதா ?

குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையத்தை ரிப்பன் வெட்டி திறப்பதா ?

குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையத்தை ரிப்பன் வெட்டி திறப்பதா ?
X

அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, ரிப்பன் வெட்டி கொண்டாட்ட மனநிலையில் திறந்து வைத்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த சமீபத்தில் பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாவட்டம் தோறும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுவதால், அந்த பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகள் மற்றும் 6 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இதையடுத்து, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 கேஎல் கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் போன்றவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்க காத்திருக்கிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கும் இந்த வேளையில், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை பலூன் கட்டி அலங்கரித்து, ரிப்பன் வெட்டி, கொண்டாட்ட மனநிலையில் திறத்து வைத்திருப்பது, கொரோனா மூன்றாம் அலையை வரவேற்கும் வண்ணம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it