Theme Check

ஆன்லைனில் சயனைடு மாத்திரை! சத்து மாத்திரையில் கலந்து மனைவியைக் கொன்ற கணவன்! 

ஆந்திரவில் மதனபள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிபவர் ரவி சைதன்யா. இவருக்கும் முன்சூலூர் பகுதியை சேர்ந்த ஆமினிக்கும் கடந்த 2015ம் வருடம் திருமணமானது. ரவி சைதன்யாவிற்கு வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலமும், ரூ.15 லட்சம் ரொக்கமும் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.

ஆன்லைனில் சயனைடு மாத்திரை! சத்து மாத்திரையில் கலந்து மனைவியைக் கொன்ற கணவன்! 
X

இந்நிலையில், ஆம்னியின் தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அப்போது, வரதட்சணையாக 2 ஏக்கர் நிலமும், ரூ.15 லட்சம் ரொக்கமும் கொடுத்தனர். இது குறித்து, ரவி சைதன்யா, ஆமினியிடம் தொடர்ந்து சண்டைப் போட்டு, தனக்கு கூடுதலாக 1 ஏக்கர் நிலம் வேண்டும் என தகராறு செய்து வந்துள்ளார்.

ஆன்லைனில் சயனைடு மாத்திரை! சத்து மாத்திரையில் கலந்து மனைவியைக் கொன்ற கணவன்!

இந்நிலையில் ஆமினி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்த ரவிசைதன்யா, ஆமினியை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆமினியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறி விட்டு, போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆமினியின் உடலை ரவி சைதன்யா எடுத்துச் செல்ல முற்பட்ட போது, போலீசார், உடலைத் தர முடியாது என மறுத்து, ஆமினியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் நடைப்பெற்ற பிரேத பரிசோதனையில் ஆமினி சயனைடு சாப்பிட்டு மரணமடைந்திருப்பது தெரிய வந்தது. ஆமினியின் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார், ரவி சைதன்யாவை விசாரித்ததில், ஆன்லைனின் சயனைடு ஆர்டர் செய்து, சத்து மாத்திரை என பொய் சொல்லி ஆமினியை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துக் கொன்றது தெரிய வந்தது. பின்னர், ஆமினி பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடி உள்ளார். ரவிசைதன்யாவை கைது செய்த போலீசார், ஆன் லைனில் சயனைடு பெற்றது எப்படி என்று

newstm.in

Tags:
Next Story
Share it