Theme Check

சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!!

சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!!

சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!!
X

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

தற்போது, ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

commercial cylinder1

அதன்படி வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,508-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.

அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,373க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று ரூ.1018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

Next Story
Share it