Theme Check

இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு 2,000-க்கு கீழ் குறைந்தது.. பாதிப்பு 62,480-ஆக சரிந்தது !!

இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு 2,000-க்கு கீழ் குறைந்தது.. பாதிப்பு 62,480-ஆக சரிந்தது !!

இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு 2,000-க்கு கீழ் குறைந்தது.. பாதிப்பு 62,480-ஆக சரிந்தது !!
X

இந்தியாவில் 73 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் வந்தது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையில் தினசரி பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தொடா்ந்து 11-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 நாள்களுக்குப் பிறகு 7,98,656 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 2.78 சதவீதமாகும். தொடா்ந்து 36-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 88,977 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். இதுவரை 2,85,80,647 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் தினசரி கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,587 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை 3,83,490 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3.24 சதவிகிதமாக உள்ளது. 11 நாட்களாக 5 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,29,476 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,71,67,696 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 26,89,60,399 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it