Theme Check

நாள்தோறும் தொல்லை.. கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி !!

நாள்தோறும் தொல்லை.. கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி !!

நாள்தோறும் தொல்லை.. கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி !!
X

குடிப்பழக்கத்தை கைவிடமறுத்த கணவன் மீது மனைவி வெந்நீரை ஊற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் மனைவி மீது தாக்குதல், கணவன் மீது தாக்குதல் அல்லது கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதில் பெற்றோர்கள் பாதிப்பு என்றாலும் அதற்கும் மேலாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள் தான்.

அந்த வகையில், தற்போது நடந்த சம்பவமும் இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(41). இவரது மனைவி கெளசல்யா(33). இவர்கள் இருவரும் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

wine

ஆனால், குடிபழக்கம் காரணமாக ராஜமாணிக்கம் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் குடியை கைவிடும்படி கணவரை, கௌசல்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ராஜமாணிக்கம் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், மதுபோதையில் மீண்டும் தகராறு செய்ததால், ஆத்திரம் அடைந்த மனைவி கௌசல்யா அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து கணவன் ராஜமாணிக்கத்தின் மீது ஊற்றினார்.

wine

இதனால், சூடு தாங்க முடியாத ராஜமாணிக்கம் வலியில் அலறினார். இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it