Theme Check

தமிழ்நாட்டில் அதிவேகமாக உயரும் தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !

தமிழ்நாட்டில் அதிவேகமாக உயரும் தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !

தமிழ்நாட்டில் அதிவேகமாக உயரும் தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !
X

தமிழகத்தில் இன்று மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தமிழகத்தில் மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 30,14,235 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 23,888 பேர் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

corona

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 17,456 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 28,06,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,073 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 5,99,80,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,50,635 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 1,70,661 ஆக உயர்ந்துள்ளது.

corona

சென்னையில் இன்று ஒரே நாளில் 8007 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 668627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, கோவை 3082 பேர், செங்கல்பட்டு 2194 பேர், கன்னியாகுமரி 1008 பேர், திருவள்ளூர் 914 பேர், ஈரோடு 906 பேர், சேலம் 785 பேர், திருப்பூர் 756 பேர், மதுரை 732 பேர், காஞ்சிபுரம் 718 பேர், நெல்லை 713 பேர், கிருஷ்ணகிரி 638 பேர், திருச்சி 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it