Theme Check

டெல்லிக்கு சென்ற தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ..!!

டெல்லிக்கு சென்ற தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ..!!

டெல்லிக்கு சென்ற தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ..!!
X

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பகிடிப்பள்ளி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது லக்கேஜ்கள் ஏற்றப்பட்டு இருந்த பெட்டியில் திடீரென்று தீப்பற்றிய சிறிது நேரத்தில் வேகமாக எரிய துவங்கியது.

secunderabad

ரயிலின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து புகை வருவதை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அனைத்தனர். இதனால் அந்த பெட்டியில் ஏற்றப்பட்டிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

secunderabad

இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் இடையே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Tags:
Next Story
Share it