Theme Check

அடடே! பஜ்ஜி எண்ணெயில் கார் ஓட்டும் நபர்!!

அடடே! பஜ்ஜி எண்ணெயில் கார் ஓட்டும் நபர்!!

அடடே! பஜ்ஜி எண்ணெயில் கார் ஓட்டும் நபர்!!
X

கடந்த 9 ஆண்டுகளாக பஜ்ஜி பொறித்த எண்ணையில் கார் ஓட்டி வரும் நபரின் செயல் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அவினாஷ் (40) என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக பஜ்ஜி பொறித்த எண்ணெயில் கார் ஓட்டி வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அவர் இது வரை 1.20 லட்சம் கி.மீ. வரை கார் ஓட்டியுள்ளார்.

அவர் முதலில் கடைக்கு சென்று பஜ்ஜி, போண்டா, போன்று பல பொருட்களை பொறித்த எண்ணையை குறைந்த விலை வாங்கி வருவார். வாங்கி வந்த எண்ணையை சுத்திகரிப்பு செய்வார்.

பின்னர் அதனை எரிபொருளாக மாற்றி தனது காருக்கு பயன்படுத்தி காரை உபயோகப்படுத்தியுள்ளார். அந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு வெறும் ரூ.65 மட்டுமே ஆவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

car bajji oil

அவ்வாறு சுத்திகரிக்கப்படும் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மி.லி எரிபொருள் கிடைக்கிறது. இப்படி அவர் சுத்திகரித்த எண்ணெய் பயன்படுத்தி இதுவரை, சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்துள்ளார். இவரது காருக்கும் இதுவரை எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை.

இதனை அவர் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை செய்து வருகிறார். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கப்படும் எரிபொருளானது லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது. மேலும் இது அனைத்து டீசல் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற டீசல் வாகனத்தில் இருந்து வரும் புகையை விட, சுத்திகரித்த எண்ணெயை பயன்படுத்தி உபயோகிக்கும் வாகனத்தில் இருந்து வரும் புகை மிகவ்வும் குறைவாக உள்ளதாகவும், இது சுற்றுச்சூழலுக்கு எந்த வித கெடும் விளைவிக்காத வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it