அட கொடுமையே ! அரசின் உதவித்தொகையை பெற சொந்த தங்கையை திருமணம் செய்த உ.பி. இளைஞர் !!
அட கொடுமையே ! அரசின் உதவித்தொகையை பெற சொந்த தங்கையை திருமணம் செய்த உ.பி. இளைஞர் !!

உத்தரபிரதேசத்தில் ஏழை, எளியோருக்கு மாநில அரசு சார்பில் திருமணம் செய்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதில், 20 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக்கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும். எஞ்சிய தொகை பணமாகவும், பரிசுப்பொருட்களாகவும் தம்பதிக்கு வழங்கப்படும்.
இதனால் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பயன்பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இந்த திருமண திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்த திருமண திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்காக இளைஞர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த கொடூரம் அம்மாநிலத்தில் அரங்கேற்றி உள்ளது.
பெரோசாபாத் மாவட்டம் டுயுன்லா பகுதியில் அரசின் திருமண திட்டத்தின் கீழ் கடந்த 11ஆம் தேதி 51 தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் மற்றும் அவர்கள் அளித்த ஆவணங்களை அந்தந்த கிராம நிர்வாகத்தின் உதவியுடன் சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தம்பதியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். திருமணம் செய்துகொண்ட இருவரும் சகோதர - சகோதரிகள் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை பெற சொந்த சகோதரியையே திருமணம் செய்த அந்த நபர் மீது போலீசாரில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரை தொடர்ந்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், திருமணத்தின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளன.
newstm.in

