Theme Check

திருப்பதியில் இன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து..!!

திருப்பதியில் இன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து..!!

திருப்பதியில் இன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து..!!
X

திருப்பதியில் வரும் அக்.7ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் இன்று காலை 7மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற உள்ளது.

அந்த வகையில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.


இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் போன்ற சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை வரை பூசப்படும். இதற்கு பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நைவேத்தியம் செய்யப்படும்.

இதனையொட்டி இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் விஐபி பிரேக் தரிசனம் சிபாரிசு கடிதங்கள் தரப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it