ரூ.20 லட்சத்திற்கு ரூபாய் நோட்டுகளை எரித்த தாசில்தார்.. இது தேவையா ?
ரூ.20 லட்சத்திற்கு ரூபாய் நோட்டுகளை எரித்த தாசில்தார்.. இது தேவையா ?

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பர்வத் சிங். இவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக வாங்கும் போது ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதனையடுத்து அவரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அரசு ஒப்பந்தத்தை தருவதற்காக தாசில்தார் கல்பேஷ் குமார் சார்பில்தான் அந்த பணத்தை வாங்கியதாக பர்வத் சிங் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை விட்டுவிட்டு தாசில்தாரை அதிகாரிகள் பிடிக்க தீவிரம் காட்டினர்.

அந்த வகையில் உடனடியாக பிந்த்வாராவிலுள்ள தாசில்தார் கல்பேஷ் குமார் வீட்டுக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகள் சென்றனர். வீட்டுக்கு அருகே ஊழல் தடுப்பு அதிகாரிகள் வருவதை பார்த்ததும் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடைத்துக்கொண்டார். பின்னர் தனது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரூபாய் லஞ்சம் பண நோட்டுகளை கேஸ் ஸ்டவ்வில் வைத்து எரித்துள்ளார்.

எனினும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் சமையல் அறையில் கருகியிருந்த நோட்டுகளை கைப்பற்றினர். அவரிடம் மீதமிருந்த ரூ.1.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து பர்வத் சிங், கல்பேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
newstm.in

