Theme Check

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான தேதி.. அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி..!

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான தேதி.. அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி..!

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான தேதி.. அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி..!
X

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம் போட்டித் தேர்வுகள், நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 ஆகிய தேர்வுகள் உள்ளன.

இந்நிலையில், 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story
Share it