தாயின் இரண்டாவது திருமணத்தை கொண்டாடிய மகள்!!
தாயின் இரண்டாவது திருமணத்தை கொண்டாடிய மகள்!!

விவாகரத்து பெற்ற தாயின் இரண்டாவது திருமணத்தை பெருமையாக கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய மகளின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த பெண்ணின் தாய்க்கும், தந்தைக்கும் 15 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து நடந்தது. ஆனால் அந்த விவாகரத்து நல்லது தான் என்று கூறுகிறார் அப்பெண். காரணம் அது ஒரு மோசமான உறவு என்று சொல்கிறார்.
அந்த உறவில் தனது தாய் அதிகப்படியான துன்பத்தை அனுபவித்தார் என்றும் கூறுகிறார். அப்பெண்ணுக்கு 16 வயதில் சகோதரன் இருக்கிறார். இருவரும் தற்போது தந்தையை வரவேற்க தயாராகியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
can’t believe mom is getting married GURL U SLAYY pic.twitter.com/Jo5LwlTlRb
— mommy (@alphaw1fe) December 15, 2021
திருமணத்திற்காக தனது தாய் மெஹந்தி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும், அவர் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோவையும் பதிவிட்டு, தனது தாய் இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களுக்கு குழந்தைகள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், புது மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
GURL IM NOT CRYING pic.twitter.com/r79j2VYS6H
— mommy (@alphaw1fe) December 17, 2021
newstm.in

