கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்!! அடித்துக் கொன்ற தந்தை!
கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த மகள்.. இளைஞரை அடித்துக் கொன்ற தந்தை!இளம்பெண்ணுக்கு அடுத்த வாரம் திருமணம்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பஸ்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பசப்பா. இவரது மகள் லட்சுமியை, அப்பகுதியைச் சேர்ந்த இளைருக்கு திருமணம் முடித்து வைத்தார். இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், லட்சுமிக்கு தொட்டேப்பள்ளி கிராமத்தில் கட்டிட பணி செய்து வந்த முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த லட்சுமியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகள் வேறு ஒருவருடன் பழகியதால், மருமகன் உயிரிழந்தது குறித்து அறிந்த லட்சுமியின் தந்தை ஆத்திரம் அடைந்தார். அவர் தனது மகளை கண்டித்தார். எனினும் லட்சுமிக்கும் முரளிக்கும் இடையிலான சந்திப்புகள் மட்டும் குறையவில்லை. இவரும் முன்பைவிட அடிக்கடி நேரில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் தந்தை பசப்பா, முரளியை கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனை இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் சந்திப்பை தொடர்ந்தனர். இந்த சூழலில் தான், பஸ்தலப்பள்ளி கிராமத்தில் முரளியும் லட்சுமியும் தனிமையில் இருப்பதை பசப்பா நோட்டமிட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு தெரியாமல் அப்பகுதிக்கு சென்ற பசப்பா, தான் கொண்டு சென்ற உருட்டுக்கட்டையால் முரளியை கடுமையாக தாக்கினார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழக்க பசப்பா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முரளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
newstm.in




