Theme Check

மாமியாரை கொன்று உடலை எரித்து தீ விபத்து என நாடகமாடிய மருமகள் கைது !!

மாமியாரை கொன்று உடலை எரித்து தீ விபத்து என நாடகமாடிய மருமகள் கைது !!

மாமியாரை கொன்று உடலை எரித்து தீ விபத்து என நாடகமாடிய மருமகள் கைது !!
X

குடும்பத் தகராறு காரணமாக மாமியாரை கொலை செய்து தீ விபத்தில் இறந்தது போல நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி விஸ்வாஸ் நகரை சேர்ந்த 46 வயது பெண் கணவரை இழந்து மகனுடன் வசித்து வந்தார். இவரது மகனுக்கு திருமணம் முடிந்துள்ளதால் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், அப்பெண்ணின் மகன் கடந்த30ஆம் தேதி வௌியூர் சென்ற நிலையில் மருமகள் ரேஷ்மா (23) வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மாமியார் தீயில் கருகி பலியானதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடலை கைப்பற்றிய பேலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

rape

பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து மருமகள் ரேஷ்மாவிடம் போலீசார் விசாரித்த போது மாமியாரை தாக்கியதை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று கணவர் இல்லாத நிலையில் மாமியாருக்கும் மருமகள் ரேஷ்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ரேஷ்மா மாமியாரை உரல் உலக்கையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். கொலையை மறைக்க கேஸ் விபத்து ஏற்பட்டு அதில் இறந்தது போல ரேஷ்மா நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேஷ்மாவை கைது செய்தனர்.


newstm.in

Next Story
Share it