Theme Check

மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை.. மாமனார் அடித்துக்கொலை !

மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை.. மாமனார் அடித்துக்கொலை !

மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை.. மாமனார் அடித்துக்கொலை !
X

மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணவரின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி கருப்புகவுண்டன்காட்டு பகுதியில் ராஜேந்திரன் (55)- லட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு வீரமணி (28) என்ற மகனும் உள்ளார். ராஜேந்திரன், தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள எளயம்பாளையத்தில் வசித்து வந்தார்.

marriage

இந்நிலையில், மகன் வீரமணிக்கு, விருதாசம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்த இளம்தம்பதியின் வாழ்க்கை சந்தோசமாக சென்ற நிலையில், மாமனார் வில்லனாக வந்துள்ளளார். அதாவது, மாமனார் ராஜேந்திரன், மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை அப்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, உடனே இருவரும் விருதாசம்பட்டி கருப்புகவுண்டன்காட்டுவளவிற்கு தனி குடித்தனம் வந்துள்ளனர். அங்கும் அவ்வப்போது சென்று மருமகளிடம் மாமனார் ராஜேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

marriage

இதனால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு அப்பெண் தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இச்சூழலில் நேற்று இரவு ராஜேந்திரன், மகன் வீரமணியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அவர், வீரமணியிடம் அவரது மனைவி பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வீரமணி, தந்தை ராஜேந்திரனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it