Theme Check

மாமியாரிடமே நகைப்பறிப்பில் ஈடுபட்ட மருமகள்! 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!!

மாமியாரிடமே நகைப்பறிப்பில் ஈடுபட்ட மருமகள்! 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!!

மாமியாரிடமே நகைப்பறிப்பில் ஈடுபட்ட மருமகள்! 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!!
X

சென்னை அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மருமகளை போலீஸார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (35), மனைவி லதா என்கிற மோகனசுந்தரி (30), தாயார் லலிதா (60) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், லலிதா வீட்டில் தனியாக இருந்த போது, இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் வந்து லலிதா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மருமகள் லதா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் லதா, இளைஞர் ஒருவரை மொபட்டில் அழைத்து வந்து வீட்டின் அருகே சாலையில் இறக்கி விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

chain 1

இதனையடுத்து, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் லதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், லதா இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதை ஒப்புக் கொண்டார். மாமியர் உடன் இருந்த பிரச்னை காரணமாக இவ்வாறு செய்துள்ளார்.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனது பள்ளித்தோழரான கார்த்திகேயன் (32) என்பவரின் உதவியுடன் நகைப்பறிப்பு திட்டத்தை தீட்டியுள்ளார். அதற்கு கார்த்திகேயனும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து லதாவை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், 3 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it