Theme Check

உணவு கொடுக்காமல் 95 வயது பெற்றோரை துரத்தி அடித்த மகள்கள்!!

உணவு கொடுக்காமல் 95 வயது பெற்றோரை துரத்தி அடித்த மகள்கள்!!

உணவு கொடுக்காமல் 95 வயது பெற்றோரை துரத்தி அடித்த மகள்கள்!!
X

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே சொத்தை அபகரித்துவிட்டு உணவுகூட கொடுக்காமல் 95 வயது பெற்றோரை மகள்கள் துரத்தி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரிப்பட்டி காட்டுவளவு சாயபு தோட்டம் பகுதியை சேர்ந்த மூதாட்டி பெருமாயி அம்மாள் (85 ), அவரது கணவர் வெள்ளைய கவுண்டர் (95 ) ஆகிய இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் வயதான தங்களை தங்களுடைய மகள்கள் கவனிப்பதில்லை என்றும், ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இருவருக்கும் 2 மகள்கள் ஒரு மகன். மகன் இறந்து விட்ட நிலையில், இரண்டு மகள்களும் அழைத்துச் சென்று, ஏமாற்றி ஐந்து ஏக்கர் நிலத்தை செட்டில்மெண்ட் செய்வதாக வாங்கிக் கொண்டனர்.

perumayi

ஆனால் மகள்கள் இருவருக்கும் உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வருகின்றனர். உறவினர்கள் அவ்வப்போது உணவளித்து வரும் நிலையில், அதனை பார்த்து ஆத்திரமடைந்த மகள்கள் வீட்டை விட்டு துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இருவரின் நிலையை பார்த்த, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காரிப்பட்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it