Theme Check

திடீரென விலகிய டி காக்.. சர்ச்சையான விவகாரம்.. தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை !!

திடீரென விலகிய டி காக்.. சர்ச்சையான விவகாரம்.. தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை !!

திடீரென விலகிய டி காக்.. சர்ச்சையான விவகாரம்.. தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை !!
X

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கு இந்திய தீவுகள்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் இடம்பெற்றிருந்தார். ஆனால், வீரர் குயின்டன் டி காக் திடீரென இன்றைய போட்டியில் இருந்து விலகினார். துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது பேசிய, கேப்டன் பவுமா, தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் டி காக் விளையாடவில்லை என பதிலளித்தார்.
team

குயின்டன் டி காக் போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது. நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்னாப்ரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே டி காக், திடீரென விலகினார் எனக் கூறப்படுகிறது.

நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குயின்டன் டி காக் மறுப்பு தெரிவிக்கும் வகையில் விலகியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்ட தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம், அணி நிர்வாகம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
team
முன்னதாக, நடப்பு உலகக் கோப்பை தொடரில் BlackLivesMatter விவகாரத்திற்காக போட்டி தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் வீரர்கள் மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் வீரர்களும் இதனை செய்கின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியிலும் இரு அணி வீரர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் குயின்டன் டி காக் விவகாரம் சர்ச்சையாகி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



newstm.in

Tags:
Next Story
Share it