அன்புக் கண்ணா மனசு இன்னும் வேதனையில தானிருக்கு!- எஸ்பிபி குறித்து பிரபலம் உருக்கம் !!
அன்புக் கண்ணா மனசு இன்னும் வேதனையில தானிருக்கு!- எஸ்பிபி குறித்து பிரபலம் உருக்கம் !!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (செப்.25) கடைபிடிக்கப்படுகிறது. 1969ஆம் ஆண்டு சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார். இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக அமைந்தது.

சினிமா துறைக்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தினார். அதன்பின்னர் தனது குரலாலும் தான் பாடும் திறனாலும் புகழின் உச்சிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்றார். இந்த சூழலில் கடந்த ஆண்டு அவர் திடீரென மறைந்தார் என்ற செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கொரோனா பாதிக்கப்பட்டு தானாகவே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டப்போது அவர் உயிரிழந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவுத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அவர் திரைத்துறைக்கு முன்பே ஒன்றாக பணியாற்றிய நெருங்கிய நண்பர் கங்கை அமரன். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உருக்கமாக கங்கை அமரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில், என் அன்புக் கண்ணா எப்படிப்பா இருக்ற ?மனசு இன்னும் வேதனையில தானிருக்கு !, என தெரிவித்துள்ளார்.
என் அன்புக் கண்ணா எப்படிப்பா இருக்ற ?மனசு இன்னும் வேதனையில தானிருக்கு ! pic.twitter.com/7RHnIkwIKS
— [email protected] (@gangaiamaren) September 24, 2021
newstm.in

